விஷ்ணுபுரம் சரவணனுக்கு பாராட்டு விழா
ஈரோடு, ஜூலை 19- பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணு புரம் சரவணனுக்கு ஈரோடு நாடகக் கொட்டகையில் பாராட்டு விழா நடைபெற்றது. சாகித்ய அகாடமியின், பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு, ஈரோடு நாட கக் கொட்டகையில் பாராட்டு விழா வெள்ளியன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலாளர் ஓடை துரையரசன் தலைமை வகித்தார். பாரதி புத்தகாலயம் இளங்கோ முன்னிலை வகித்தார். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாவட் டத் தலைவர் மு.சங்கரன் வரவேற்றார். விஷ்ணுபுரம் சரவண னின் நூல்களில் சூழலியல் குறித்து தமுஎகச மாவட்டச் செய லாளர் இ.கலைக்கோவன், சமூகம் சார்ந்து முனைவர் மு.சர் மிளா தேவி மற்றும் புனைவு உலகம் குறித்து சரிதா ஜோ ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக, ஈரோடு நாடகக் கொட்டகையின் நடிகர்கள் நடத்திய சிறப்பு நாடக நிகழ்ச்சி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இறுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் செ.கார்த்திக் நன்றி கூறினார்.