tamilnadu

நீதிபதி மீது காலணி வீச்சு வழக்கறிஞரின் செயலுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

நீதிபதி மீது காலணி வீச்சு  வழக்கறிஞரின் செயலுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

சென்னை, அக்.8 - உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது  நீதிமன்ற அரங்கிலேயே காலணி வீசப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை  தருகிறது. சனாதன வழக்கறிஞரின் இத்தகைய வன்செயலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.  இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங் வார்த்தைகளில், “இது இந்திய உச்சநீதிமன்றத்தின் மீது  நடத்தப்பட்ட அப்பட்டமான சாதி அடிப்படையிலான தாக்குத லாகத் தெரிகிறது”.  சனாதன தர்மம் தாக்கப்படுவதை இந்தியா சகித்துக் கொள் ளாது என்று காலணி வீசிய வழக்கறிஞர் கூச்சலிட்டுள்ளார். சனா தனம் இந்தியச் சமூகத்தின் மீது திணித்துள்ள சாதிய முறை மையை, ஒடுக்குமுறையை பல நூற்றாண்டுகளாக அனுபவிப் பவர்கள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டுமென்பதைத் தவிர  வேறென்ன பொருள். அத்தகைய சாதிய வெறியின் உச்சமே தலைமை நீதிபதி மீதான காலணி வீச்சு.  பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தொலை பேசி மூலம் பேசியதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இத்த கைய வன்மங்கள் இவ்வளவு உயரிய இடம் வரை தமது கொடுங் கரங்களை நீட்டுவதன் பின்புலத்தில் உள்ள சித்தாந்தமும்,  வெறுப்பு அரசியலும் ஒன்றிய ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களால்  வளர்த்தெடுக்கப்படுவதே என்பதை சுட்டிக் காட்ட விழைகிறோம். ஒரு புறம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டை ஒட்டிய நிகழ்வுக்கு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தாயாருக்கு அழைப்பு விடு வதும், இன்னொரு பக்கம் இத்தகைய அவமானத்தை அவர் மீது  கட்டவிழ்த்து விட முனைவதும் சங் பரிவாரின் இரண்டு முகங்களே. எனவே நாடு முழுக்க இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சமூக  நீதி இயக்கங்கள் தங்களின் கண்டன குரலை வலிமையாக எழுப்புவதும், சங்பரிவாரத்தின் இத்தகைய அராஜகங்களை தடுத்து நிறுத்துவதும், வர்ணாசிரம - சாதிய ரீதியிலான தாக்கு தல்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வதும் காலத்தின் தேவை  என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருதுகிறது.  காலணி வீசிய வழக்கறிஞர் மீது சட்ட நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு கடும் தண்டனை உறுதி செய்யப் பட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  கோரிக்கை விடுக்கிறது. மேலும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாவட்டக் குழுக்கள் அக்டோபர் 10 ஆம் தேதி  கண்டன இயக்கங்களை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள் கிறோம்” என கூறியுள்ளனர்.