tamilnadu

img

நாணயங்கள் வழியாக வரலாற்றை கொண்டு செல்லும் முயற்சி!

நாணயங்கள் வழியாக வரலாற்றை கொண்டு செல்லும் முயற்சி!

-எம்.பிரபாகரன் - நாமக்கல், ஆக.27- பள்ளிபாளையம், வெப்படை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி யில் செவ்வாயன்று பழங்கால நாண யங்கள் கண்காட்சி நடைபெற்றது. இக் கண்காட்சி மாணவர்களுக்கு மட்டு மின்றி, பார்வையாளர்கள் அனைவ ரையும் கவர்ந்தது. நாணயங்கள் ஒவ்வொன்றும் ஒவ் வொரு காலகட்டத்தில் வெளியிடப்பட் டவை, இவைகள் ஒவ்வொன்றும் அந் தந்த காலத்தில் பண்பாடு, கலாச்சா ரம், ஆட்சி, நிர்வாகம் அணைத்து வர லாற்றையும் எடுத்துச்சொல்கிறது.  அந்தவகையில் நாமக்கல் மாவட் டம், வெப்படையில் நடைபெற்ற இக் கண்காட்சியில் சுமார் 400 முதல் 500 ஆண்டுகள் பழமையான நமது நாடு மற்றும் பல்வேறு நாடுகளில் நாணயங் கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றில், மன்னர் காலத்து நாண யங்கள், சேர, சோழ, பாண்டியர் காலத்து நாணயங்கள், மைசூர், மதுரை நாயக்கர், திப்பு சுல்தான் காலத்து செம்பு நாணயங்கள் ஆகி யவை இடம்பெற்றிருந்தன. ஒரு பைசா, இரண்டு பைசா, அஞ்சு பைசா, பத்து பைசா போன்ற நம் முன்னோர் கள் பயன்படுத்திய நாணயங்களும் மாணவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்தியாவில்  அப்போது புழக்கத்தில் இருந்த  நாணயங்களும் இடம் பெற்றிருந் தன. இளைஞரின் முயற்சி இதுகுறித்து குமாரபாளையத்தை சேர்ந்த நாணய சேகரிப்பாளர் தாமரை ராஜ் கூறுகையில், கடந்த 20 ஆண்டு களாக பழங்கால நாணயங்கள் கண் காட்சியை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறேன். “நாணயங்கள் மட் டுமே வரலாற்றை பாதுகாக்கும் பெட் டகமாகத் திகழ்கின்றன. இன்றைய தலைமுறையினர் நாணயங்களின் வர லாற்றை மறந்துவிட்டனர். அதை மீட் டெடுக்கவும், விழிப்புணர்வை ஏற்ப டுத்தவும் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்க ளில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் இக்கண்காட்சியை நடத்தியுள்ளேன், என்றார். பலவிதமான வரலாற்றுச் சின்னங்கள் இந்திய நாணயங்கள் மட்டு மின்றி, அமெரிக்கா, நைஜீரியா, பங்க ளாதேஷ், இலங்கை உள்ளிட்ட சுமார்  150 நாடுகளின் நாணயங்கள் மற்றும்  ரூபாய் நோட்டுகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. நாணயங்க ளைத் தவிர, பண்டைய கால போர்  கருவிகள், ஆபரணங்கள், ஆங்கிலே யர் கால வானொலி, தபால் அட்டை கள், தொலைபேசி, இசைக்கருவிகள், பீரங்கி குண்டுகள், பழங்கால கேம ராக்கள், சிற்றரசர்கள் பயன்படுத்திய வாள்கள் போன்ற பல்வேறு வரலாற் றுப் பொருட்களும் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.  பணம் சம்பாதிக்கும் நோக்கம்  மட்டுமே இன்றைய சமூகத்தில் மேலோங்கி இருக்கும் நிலையில், நம் வரலாற்றை மறப்பது வேதனைக் குரியது. மாணவர்களிடையே இக்கண் காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தா லும், இம்முயற்சியை பரவலாக அனை வரிடமும் கொண்டு சேர்க்க அரசின் ஆதரவு தேவை என்று தாமரை ராஜ் கோரிக்கை விடுத்தார். மேலும், “என்னைப்போன்ற பழங்கால நாணய சேகரிப்பாளர் களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் தனி அரங்கம் அமைத்து இதுபோன்ற கண்காட்சி களை நடத்த உதவ வேண்டும். மாநி லம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி களில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஆர்வலர் களும், நமது வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இதுபோன்ற இளைஞர்களுக்கு அரசு உதவ வேண்டும், என்றார். கால ஓட்டத்தில் கண்முன்னே கண்ட காட்சிகள் யாவும் கானல் நீராய் கரைந்து போகும் நிலையில், இந்திய நாட்டின் பழங்கால நாணயங்கள் பொருட்கள் ஆகியவற்றை ஆங் காங்கே தொடர்ச்சியாக சேகரித்து, தொடர்ந்து மக்களிடையே நம்மு டைய வரலாறுகளை கொண்டு சேர்க் கும், இதுபோன்ற இளைஞர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்பதே சமூக ஆர்வர்களின் கோரிக்கையாக உள் ளது.