tamilnadu

img

100 நாட்களாக நிரம்பி இருக்கும் அமராவதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

100 நாட்களாக நிரம்பி இருக்கும் அமராவதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை, ஆக.29-  அமராவதி அணைக்கு சீரான நீர்  வரத்து இருக்கும் காரணமாக தொடர்ச்சியாக நூறு நாட்களுக்கு மேலாக அணை முழுமையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். உடுமலை அருகே உள்ள அமரா வதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும்  கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637  ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின் றன. பழைய ஆயக்கட்டு மற்றும்  புதிய  ஆயக்கட்டு என்ற வகையில் தண்ணீர்  திறக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய அணையா கவும் அமராவதி அணை உள்ளது.  இந்நிலையில் அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த  ஜூன் மாதம் முதல் பெய்த பருவ மழை யால், அணையின் நீர்மட்டம் வேக மாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டி யது. தற்போது வரை அணை முழு  கொள்ளளவில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88.16 அடி யாகவும், அணைக்கு நீர்வரத்து வினா டிக்கு 780 கன அடியாக உள்ளது. அணை யின் பாதுகாப்பு கருதி உபரியாக 644 கன  அடி நீர் வெளியேற்றப்படுகிறது மேலும்  நீர் பிடிப்பு பகுதிகளில் சுமார் 2 மில்லி மீட் டர் மழை பெய்து வருகிறது.