tamilnadu

img

முன்னாள் மாணவிகள் சந்திப்பு

முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை, அக்.12- கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 40 ஆண்டுக ளுக்கு முன் படித்த செவிலியர் பிரிவு மாணவிகள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த 1982 -  1985 ஆம் ஆண்டுகளில் “டிப்ளமோ இன் நர்சிங்” துறை யில் படித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு, கோவை  காந்திபுரம் பகுதியிலுள்ள தனியார் அரங்கில் ஞாயி றன்று நடைபெற்றது. நர்சிங் படித்த பெரும்பாலான மாணவிகள் முதல் நிலை, இரண்டாம் நிலை செவிலி யர் கண்காணிப்பாளர்கள், செவிலியர் கல்லூரி முதல் வர்கள், பேராசியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள னர். இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், ஓய்வு பெற்ற  செவிலியர் துறை இணை இயக்குநருமான அலமேலு  கலந்து கொண்டார். அவரை கண்டதும் முன்னாள் மாண வர்கள் கட்டித்தழுவி பழைய நினைவுகளை பகிர்ந்து  நெகிழ்ந்தனர். மேலும், அவருக்கு ராஜா ரவிவர்மாவின்  ஓவியத்தை பரிசாக வழங்கி கௌரவித்தனர்.