உடுமலை புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க உடன்பாடு
உடுமலை, செப்.1- உடுமலையில் புதிதாக திறக்கப்பட்ட கூடுதல் பேருந்து நிலையத்திற்கு முன்பு ஆட்டோ நிறுத்தம் அமைப்பதில் கடந்த ஒரு மாத காலமாக தொழிற்சங்கங்களுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவி வந்தது. இதையொட்டி உடுமலை ந கர மன்றத் தலைவர் மு.மத்தீன், உடுமலை காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் பங் கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை திங்களன்று உடுமலை நகர் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிஐடியு, எல்.பி.எப், ஏ.டி.பி. உள்ளிட்ட சங்கங்க ளுக்கு உரிய எண்ணிக்கையில் ஆட்டோக்களை புதிய பேருந்து நிலையம் முன்பு நிறுத்தி வாடகைக்கு எடுப்பது. இந்த ஆட்டோ நிறுத்தத்திற்கு பேரறிஞர் அண்ணா கூடுதல் பேருந்து நிலையம் நகராட்சி ஆட்டோ நிலையம் என்ற பொது வான பெயரில் இயங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் சிஐடியு திருப்பூர் மாவட்ட ஆட்டோத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சிவராமன், உடுமலை ஆட்டோ தொழிலாளர் சங்கச் செயலாளர் ஏ.எஸ். ஜஹாங்கீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு உறுப்பினர்கள் ஆ.பஞ்சலிங்கம், என்.சக்திவேல், ஆட்டோ சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.