சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை
உதகை, செப்.1 – கூடலூர் நகரில் இரவு நேரத்தில் திடீரெனச் சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை, அவ்வழியாகச் சென்ற கார் உள்ளிட்ட வாகனங்களை ஆக்ரோசத்துடன் தாக்கி சேதப்படுத்தியதால் வாகனத் தில் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உலா வருவது அதிகரித்துள்ளது. இந்நிலை யில் கூடலூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குச் செல் லும் தேசிய நெடுஞ்சாலையில், இரவு நேரத்தில் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரெனச் சாலையில் உலா வந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் கடைகளில் தஞ்சம் புகுந்தனர். அப்போது, எதிரே வந்த காரை ஆக்ரோஷ மாக தாக்கி சேதப்படுத்தியது. இதனை அறிந்த பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சத்தம் எழுப்பி காட்டு யானையை நகர் பகுதியிலிருந்து விரட்டினர். நகர் பகுதி யில் உலா வரும் காட்டு யானையைக் கண்காணித்து அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
