குட்டிகளுடன் ஆற்றில் குளித்து மகிழ்ந்த யானை கூட்டம்
நீலகிரி, செப்.15- முதுமலை புலிகள் காப் பகத்திற்கு இடம்பெயர்ந்து வந்துள்ள காட்டு யானை கூட்டம் குட்டிகளுடன் ஆற் றில் குளித்து குதுகலித்த காட்சிகளை கண்டு சுற்று லாப் பயணிகள் மகிழ்ச்சிய டைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதி யில் அமைந்துள்ள சிங்கார செல்லும் சாலை யில் உள்ள ஆற்றில் அவ்வபோது வனவிலங்கு கள் தண்ணீருக்காக வருகின்றன. இந்நிலை யில், கேரளம் மற்றும் கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்து முதுமலை புலிகள் காப் பகத்திற்கு திங்களன்று 4 குட்டிகளுடன் ஆற் றில் தண்ணீர் பருக வந்த 13க்கும் மேற்பட்ட காட்டுயானை கூட்டம் ஆற்றில் தண்ணீர் குடிக் கும் போது குட்டி யானைகள் ஆற்றில் மிகவும் சுவாரசியமாக விளையாடிய காட்சியை அவ் வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். யாருக்கும் எந்த இடையூறும் செய் யாத அந்த காட்டு யானை கூட்டம் நீண்ட நேரம் தண்ணீரில் விளையாடியது. பிறகு குட்டிகளுடன் மசினகுடி- சிங்கார சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வீடியோ எடுத்து ரசித்தனர்.
