தும்பிக்கையில்லா குட்டி யானையை அழைத்துச் சென்ற யானை கூட்டம்
கோவை, ஆக.21- வால்பாறை அருகே தும்பிக்கையில்லாத குட்டி யானையை, பாதுகாப்பாக காட்டு யானை கூட்டம் அழைத்துச் சென்ற காட்சி சமூக வலைதளங்க ளில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், வால்பாறை அருகே சாலக்குடி செல்லும் சாலையானது, வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். மூங்கில்கள் அதிகம் உள்ள தால் அதிகளவில் யானைகள் சாலையோரம் தென்படு கின்றன. இந்நிலையில், 3 வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று தும்பிக்கையில்லாத நிலையில் சாலையை கடந்து சென்றது. அந்த குட்டியை, யானைக் கூட்டம் பாதுகாப்பாக அரவணைத்து வனப்பகுதிக்குள் அழைத்து சென்றன. இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.