தோழர் பி.முருகேசன் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி
திருப்பூர், ஜூலை 21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர முன் னாள் செயலாளர், சிஐடியு பஞ்சாலை தொழிலாளர் சங்க மாநில நிர்வாகியாக செயல்பட்டவர் தோழர் பி.முருகே சனின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று கடைப்பி டிக்கப்பட்டது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக தோழர் பி.முருகேசன் உருவப்படம் வைக்கப்பட்டு நினைஞ்சலி கூட் டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆர்.கணேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் பங்கேற்று முருகேச னின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெய பால், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன், சிஐடியு பஞ்சாலை சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.