tamilnadu

img

மாஸ்கோ நகரில் காட்சிப்பொருளாக இருக்கும் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை தொட்டி

மாஸ்கோ நகரில் காட்சிப்பொருளாக இருக்கும் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை தொட்டி

திருப்பூர், ஆக.29- திருப்பூர் மாநகராட்சி மாஸ்கோ நக ரில் ரூ.35.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் தானியங்கி குடிநீர் சுத் திகரிப்பு இயந்திரம் பயன்பாட்டில் இல் லாமல் உள்ளது. இதை உடனடியாக சரி  செய்து மக்களுக்கு பயன்படும் வகை யில் செயல்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும் என கோரிக்கை எழுந்துள் ளது. திருப்பூர் மாநகராட்சி 28ஆவது வார் டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாஸ் கோநகர் முக்கிய வீதி, ஸ்ரீவித்யா நகர்  பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு 50  ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட  மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட் டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கே. தங்கவேல், தொகுதி வளர்ச்சி நிதியில்  ரூ.10 லட்சம் மற்றும் மாநகராட்சி பொது  நிதியில் ரூ.5 லட்சத்துடன் மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் இந்த மேல் நிலை தொட்டி கட்டப்பட்டது. அதன்பின்  இந்த தொட்டியில் 2018 ஆம் ஆண்டு  ரூ.20.50 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத் தப்பட்டது. மொத்தம் ரூ.35.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி தற்போது பயன்பாட்டில் இல் லாமல் செயலிழந்து காணப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறு கையில், நகர விரிவாக்கத்தால் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இங்குள்ள  மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் விநி யோகம் செய்ய ஏதுவாக மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டது. அதன்பின்  இதில் இருந்து சுற்றுவட்டார பகுதி மக்க ளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட் டது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  வழங்கப்போவதாக கூறி சுத்திகரிப்பு இயந்திரங்களை பொருத்தினர். அதன் பின் கொஞ்ச காலத்திற்கு மட்டுமே செயல்பட்டது. தற்போது கடந்த 4 ஆண் டுகளாக இது பயன்பாட்டில் இல்லை.  மேல்நிலைத் தொட்டி முழுவதும் சேதம டைந்துள்ளது. சுத்திகரிப்பு இயந்திரம், மேல்நிலை தொட்டி, பராமரிப்புகாக தொட்டியின் மேல் ஏறும் ஏணி, கீழே பொருத்தப்பட்டுள்ள மின் விளக்கு என  அனைத்தும் உடைந்துள்ளன. சுத்திக ரிப்பு நீரை சேகரிப்பதற்காக வைக்கப் பட்ட சின்டெக்ஸ் டேங்கில் மட்டும் சப்பை தண்ணீர் நிரப்பப்பட்டு விநியோ கிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் மேலே அமைக்கப்பட்டுள்ள 50 ஆயிரம்  லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை தொட்டியை சீரமைத்து, தண்ணீர்  ஏற்றினால் கூட இப்பகுதி மக்கள் பயன்  பெறுவார்கள் என தெரிவித்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறு கையில், இங்கு தற்போதைய வாக்கா ளர்கள் மட்டும் 16 ஆயிரம் பேர் உள்ள னர். இச்சூழலில் இப்பகுதிக்கு வாரத் தில் ஒரு நாள் தான் தண்ணீர் விநியோ கிக்கப்படுகிறது. இந்த தொட்டியை சீர மைத்தால் வாரத்திற்கு இரு தினங்க ளாவது குடிநீர் விநியோகிக்க முடியும்.  எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வா கம் இந்த தொட்டியை சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து 28 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சேகரிடம் கேட்ட போது, மேல்நிலைத் தொட்டியை சீர மைக்க மாநகராட்சி நிர்வாகம் எஸ்டி மேட் போட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் குழாய் அமைக்கப் பட்டுள்ளன. விரைவில் பழுது நீக்கி முழு மையாக சரி செய்து, இந்த மேல்நிலை  தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோ கிக்கப்படும். ஆர்.ஓ.வை சரி செய்வது குறித்து மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என  கூறினார்.