tamilnadu

img

சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு

சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு

கோவை, ஆக.17- வாளையாறு அருகே சாலையோரத்தில் நின்று கொண்டி ருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில், சென்னை யைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். சென்னை, அம்பத்துரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி மலர் (40) குழந்தைகள் தீபிகா (9), கஷிகா (4)  மற்றும் உறவினர்களான ஸ்ரீராம் மற்றும் அவரது மனைவி லாவண்யா (40) மகன் ஹிருத்திக் ரோஷன் (16) ஆகி யோர் ஞாயிறன்று கேரளம் மாநிலம், கொச்சினுக்கு சென்று விட்டு, நள்ளிரவு சென்னை செல்வதற்காக காரில் கிளம்பி னர். அப்போது காரை செந்தில் ஒட்டி வந்தார். வாளை யாறு, சந்திராபுரம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு  லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் மலர் மற்றும்  லாவண்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வாளையாறு காவல்  துறையினர், தீயணைப்பு துறையினருடன் மீட்பு பணியில்  ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி காருக்குள் சடலமாக கிடந்த மலர்  என்பரின் உடலை நீண்ட நேரம் போராடி மீட்டனர். இதை யடுத்து உயிரிழந்த மலர் மற்றும் லாவண்யா ஆகியோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பலத்த  காயமடைந்த ஹிருத்திக் ரோஷன், கஷிகா ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர்.  செந்தில், ஸ்ரீராம், தீபிகா ஆகியோர் கேரளாவில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டனர். இவ்விபத்து தொடர்பாக வாளையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தூக்கக் கலக்கத் தில் செந்தில் காரை இயக்கியது தான் விபத்துக்கான காரணம்  என கூறப்படுகிறது.