tamilnadu

img

குழு, தடகள விளையாட்டுப் போட்டிகள் அந்தியூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

ஈரோடு, செப்.27- பவானி வட்ட அளவில் நடை பெற்ற குழு மற்றும் தடகள விளை யாட்டுப் போட்டிகளில் அந்தியூர் மைக்கேல்பாளையம் புனித மைக் கேல் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமான புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த வெற்றியாளர் பட்டத்தை பெற்றனர். ஈரோடு மாவட்டத்தில் 2019-20  ஆம் கல்வியாண்டில் குறுமைய பவானி வட்ட அளவிலான அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்ற குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் அந்தியூரில் நடைபெற்றது. இளையோர், மூத்தோர், மிகமூத்தோர் என மூன்று பிரிவுகளாக விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் 52 முதல் பரிசு, 32 இரண்டாம் பரிசு,  26 மூன்றாம்  பரிசு என மொத்தம் 110 பதக்கங்களை வென்று அரசு உதவிபெறும் பள்ளி யான அந்தியூர் மைக்கேல்பாளையம் பள்ளியின் மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இம்மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் வெற்றிக்குக் காரண மான பள்ளியின் விளையாட்டு ஆசிரி யர்கள் தே.இருதயபுஷ்பராஜ், எல். ஜோதிமணி, பயிற்சியாளர் தாமோ தரன் ஆகியோரை பள்ளியின் தாளா ளர் மற்றும் தலைமையாசிரியர் லாரன்ஸ் அடிகளார் ஆகியோர் பாராட்டி கெரளவித்தனர். மேலும், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் அடுத்து நடைபெறவுள்ள ஈரோடு மாவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.