tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

சேலம், ஜூன் 27- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் வியாழனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் வியாழனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவல கத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களிடம் இருந்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவ டிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த முகாமில் அவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்ச்சி சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சேலம் மாவட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.