tamilnadu

img

விகேசி நிறுவனத்தின் சார்பில் மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலணிகள் வழங்கல்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு  பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு விகேசி நிறுவனத்தின் சார்பில் மருத்துவமனை முதல்வர் நிர்மலாவிடம் காலணிகள் வழங்கப்பட்டது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விகேசி நிர்வாக இயக்குநர்கள் நவுசாத், முஸ்தபா, யாசின், ராஜேஸ் கண்ணன், பினு ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.