tamilnadu

img

ஊதியக்குழு பரிந்துறையின்படி ஊதியம் வழங்கிடுக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அவிநாசி, ஆக. 26- துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் குடிநீர் தொட்டி இயக்குநர்களுக்கு 7 வது ஊதியக்குழு ஊதிய ம், நிலுவைத் தொகை வழங்கக்கோரி சிஐடியு சார் பில் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முப்பத்தொரு ஊராட்சிக ளில் நூற்றுக்கணக்கான துப்புரவு தொழிலாளர்களும், மேல்நிலை குடி நீர் தொட்டி இயக்குநர்களும் உள்ள னர். இத்தொழிலாளர்களுக்கு ஏழா வது ஊதியக்குழு பரிந்துரையின்படி யான ஊதியமும், நிலுவைத் தொகை யும் வழங்கப்படவில்லை. குறிப்பாக மே 2000 ஆம் ஆண்டுக்கு முன் பணியில் உள்ள டேங்க்ஆபரேட்டர்களுக்கு மாத ஊதியம் ரூ.5360ம், அதற்குப் பின் பணியில் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு ரூ.4500 ம் வழங்கப்பட வேண்டும்.  இதேபோல சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவு ஊழியர் களுக்கு ரு.6360 மாத ஊதியமும், 2013 முதல் பணியாற்றி வரும் துப்புரவு ஊழி யர்களுக்கு ரு.5310 ஊதியமாக வழங்க வேண்டும். ஆனால் மேலே குறிப்பிட்ட அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட வில்லை. குறைவாகவே வழங்கப்படு கின்றது. எனவே 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் கணக் கிட்டு, நிலுவைத் தொகையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜன் தலைமை யில் முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இதையடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹரிகரன் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் கோரிக்கை நிறை வேற்றப்படும் என தெரிவித்ததைய டுத்துதொழிலாளர்கள் கலைந்து சென் றனர். இதில்  சங்கத்தின் மாவட்ட தலை வர் பி. பழனிசாமி, சங்க நிர்வாகிகள்  ராஜூ,பழனிச்சாமி, ரமேஷ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.