tamilnadu

பருவ மழை எதிரொலி: கோவை, ஈரோட்டில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

கோவை, நவ. 21- பருவ மழை காரணமாக மாவட் டங்களின் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, தொண்டாமுத்தூர், சூலூர் உட்பட 12 வட்டாரங்களிலும் பொதுப்பணித் துறையினர் (நீர்வள ஆதாரம்) கட்டுப் பாட்டில் 133 திறந்தவெளிக் கிணறு கள் 32 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர்மட்டம் அளவீடு செய்யப் பட்டு அறிக்கை அளிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் கோவையில் தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக பெய்தது. இத னால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்ட மும் கணிசமாக உயர்ந்துள்ளது.  இது தொடர்பாக பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரம் அதிகாரிகள் கூறியதாவது, கடந்த அக்டோபர் மாதத்தில் கிணத்துக்கடவு, பொள் ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மூன்று வட்டாரங்களை தவிர்த்து, மற்ற 9 வட்டாரங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதில், அதிக பட்சமாக சுல்தான் பேட்டையில் 2.18 மீட்டர், மதுக்கரையில் 2 மீட்டர், தொண்டாமுத்தூரில் 1.78 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.10 முதல் 2.8 மீட்டர் அதிகம். நிலத்தடி நீர் மட்டத்தை அளவீடு செய்வதற்கு மின்னணு கருவிகள் வழங்கப்பட்டுள் ளது. தற்போது டேப் மூலம் கிணறுகளில் நீர் மட்டம் அளவிடப்படுகிறது. 10 சத விகித கிணறுகளில் முறையாக நீர் மட்டத்தை அளவிடும் மின்னணு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை துல்லியமாக வும் எளிதாகவும் பெறமுடியும். எதிர்கா லத்தில் அனைத்துக் கிணறுகளிலும் நீர் மட்டத்தை அளவிடும் மின்னணு கருவி பொருத்தப்படும் என அதிகாரி கள் கூறினர்.  

கோபிசெட்டிபாளையம்

இதேபோல், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டா ரப் பகுதிகளிலான கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், நம்பியூர், துறை யம்பாளையம், கொளப்பளுர் உள் ளிட்ட பகுதிகளில் தொடர் மழை கார ணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந் துள்ளதாக பொதுப்பணித்துறை மற் றும் வேளாண்மைத்துறையினர் தெரி வித்துள்ளனர். இது அப்பகுதி விவசாயி களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

;