கோவை, ஜூன் 23– அரசு பேருந்துகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டாம் என்ற போக்குவரத்து கழகத்தின் சுற்றறிக்கை பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளிகைக் கடை, பெட்டிக் கடை, பெட்ரோல் பங்க் மற்றும் பேருந்து பயணங்களிலும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கு வதில் பெரும் தயக்கம் உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கூட பத்து ரூபாய் நாணயம் வாங் கப்படுவதில்லை என்கிற குற்றச் சாட்டு தொடர்ந்து நிலவுகிறது. சில நேரங்களில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் சண்டை போட்டு பஞ்சாயத்து செய்கிற நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம், நடத்துநர்கள் பேருந்தில் பணிபுரியும் போது, 10 ரூபாய் நாணயத்தை பயணிகள் கொடுக்கும் போது தவிர்க்கவும். தவறும் பட்சத்தில் வழித்தடத்தில் பயணிகளுக்கு வழங்கிவிட வேண்டும். வசூல் தொகை செலுத் தும் போது தவிர்க்குமாறு அனைத்து நடத்துநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கை சமூக வலைத் தளங்களிலும் பரவி வருகிறது. இதுகுறித்து கோவை நகரப் பேருந்துகளில் உள்ள அரசு போக்குவரத்து நடத்துனர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு அதி காரப்பூர்வமான சுற்றறிக்கை இதுவரை அனுப்பவில்லை. ஆனால் ஏற்கனவே அதிகாரிகள் எங்களிடம் வாய்மொழியாக பத்து ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டாம். அப்படி வாங்கினால் உங்களின் மாதச் சம்பளம் பத்து ரூபாய் நாணயமா கக் கொடுக்க நேரிடும் என எச்ச ரிக்கை செய்திருக்கின்றனர். ஆகவே நாங்களே கூடுமானவரை பத்து ரூபாய் நாணயத்தை வாங் குவதைத் தவிர்த்து வருகிறோம். தவிர்க்க முடியாமல் வாங்கினால், அதனை மற்ற பயணிகளுக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்றனர். இதுகுறித்து வங்கி ஊழியர் களிடம் கேட்கையில், பல மாதங் களாகவே பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்கிற பீதி நமது மக்களிடையே உலவுகிறது. வங் கியில் உள்ளவர்கள் வாங்க மாட்டோம் என்று சொன்னால் அது சட்ட விரோதமானது. ரிசர்வ் வங்கி அச்சடித்த நாணயத்தை வங்கிகளே வாங்காது என்றால், பின்னர் எதற்கு ரிசர்வ் வங்கி இந்த நாணயத்தை அச்சடிக்க வேண்டும் என்கிற கேள்வி எழும். எனவே, பத்து ரூபாய் நாண யத்தை வாங்க மாட்டோம் என்று சொல்கிற நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்க வேண் டும். காவல் துறையும் பிரச்ச னையைப் பேசித் தீர்க்காமல் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இது அனைத்து பத்திரிக்கைகளி லும் செய்தியாக வருவதை அரசு நிர்வாகம் உத்தரவாதப் படுத்தினால் இதுபோன்ற அச் சத்திற்கு முடிவு கிடைக்கும் என்றார். இதற்கிடையில், சூலூர் சட்ட மன்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக தனது வேட்பு மனுக்கான பிணைத் தொகை முழுவதையும் பத்து ரூபாய் நாணயமாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.