கேரள முதல்வரின் மகள் வீணா விஜயனின் திருமணம் இன்று மிக எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
கேரள முதல்வரின் மகள் வீணா விஜயன் . இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஷ் இவர்கள் இருவரது திருமணம் இன்று மிக எளிமையான முறையில் நடைபெற்றது. கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் இல்லத்தில் நடந்த இந்த திருமணத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மிக குறைந்த உறவினர்களே பங்கேற்றனர்.
இந்த திருமணத்தில் கேரள தொழில் துறை அமைச்சர் இ.பி ஜெயராஜன், மாநில சிபிஎம் உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் சஜூஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.