கேரளாவில் பழமையான அரிய வகை மீன் இனம் கண்டறியப்பட்டுள்ளது.
கேரள கடற்பகுதியில் விலாங்கு மீனைப்போல் நீந்தும் அரியவகை மீனை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த மீன் தோற்றத்தில் டிராகனைப்பபோல உள்ளது. பல நூறு ஆண்டுகளாக மறைந்திருந்த இந்த மீன் நீருள்ள நிலத்தடிப் பாறைகளில் இருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு லார்ட் ஆப் த ரிங்ஸ் என்ற ஹாலிவுட் இதிகாச திரைத் தொடரில் வரும் ஒரு கதாப்பாத்திரமான கால்லும் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. டிராகன் பாம்பு தலைகளைக் கொண்ட இந்த மீன் நூறாண்டுகள் கடந்தும் தனது பழைய தன்மையை தக்க வைத்துள்ளது.
மஹாபலி என்ற மேலும் ஒரு துணை இன மீன் வகையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மீன்கள் கடந்த 10 ஆண்டுகளில் உலகில் நிகழ்ந்த சிறந்த கண்டுபிடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.