tamilnadu

img

காதலர் தின விழா மாணவர் சங்கத்தினர் கொண்டாட்டம்

தருமபுரி, பிப்.14- காதலர் தினத்தை முன்னிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளியன்று தரும புரியில் கேக் வெட்டி கொண்டாடினர். உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகி றது. இதன்ஒருபகுதியாக, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் உள்ள பெரியார் சிலை முன்பு காதலர் தினம்  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முன்ன தாக, மாவட்ட துணைத் தலைவர் பி.தமிழ் அமுதன் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார். பின்னர் காதலர் தினத்தை கொண் டாடும் வகையில் கேக்வெட்டினர். இதை யடுத்து சாதி மதங்களை ஒழிப்போம், ஆதலி னால் காதல்செய்வீர் என முழுக்கமிட்டனர். இந்நிகழ்வில் மாவட்டபொருளாளர் ஆடலரசு, மாவட்ட துணை செயலாளர் பிரசாந்த், ஒன்றிய தலைவர் பூவரசன், ஒன்றியச் செயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.