tamilnadu

img

கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு

கரூரில் நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.

கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். இதனால், அடுத்தடுத்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கரூர்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்த நிலையில், இன்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுணா (65) என்பவர் இன்று உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 11 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.