tamilnadu

img

காவல்நிலைய மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சிதம்பரம், ஜூலை 31- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் காவல் நிலையத்தில் விசார ணைக்கு அழைத்துச் சென்ற வினோத் என்ப வர் காவல் நிலையத்தில் அடித்து கொலை  செய்யப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையம் அருகில் வட்டச்  செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து படுகொலை களும், கொள்ளைகளும் அன்றாட நிகழ்ச்சி களாக மாறி வருகிறது என்றார். குற்றவாளிகளை கைது செய்கிறோம் என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து, அடித்துக் கொள்ளும் சம்பவங்களும் அதிக ரித்துள்ளது. காட்டுமன்னார்கோவில் வினோத் தற்கொலை செய்துகொண்டது போல் தெரியவில்லை. காவல்துறையினர் பலமாக தாக்கியதில் அவர் மரண மடைந்துள்ளதாகத் தெரிகிறது. எனவே இந்த  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் இல்லையென்றால் சிபிசிஐடி விசாரணை கேட்டு நீதிமன்ற கதவை தட்டவும் மார்க்சிஸ்ட்  கட்சி அஞ்சாது  என்றும் அவர் தெரிவித்தார்.  மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் மூசா, கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ராமச்சந்திரன், அசோகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், ராஜா, மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;