districts

பழனி வெடி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது முதல்வர் ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

திண்டுக்கல், ஜன.22-  பழனி வடக்கு தாதநாயக்கன் பட்டியில் அமைய உள்ள வெடி மருந்து தொழிற்சாலைக்கு தமிழ் நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.   இது தொடர்பாக அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  எழு திய கடிதத்தில் கூறியிருப்பதாவது: முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி நக ரம் உலக பிரசித்தி பெற்ற நகரமா கும்.  இங்கே உள்ள ஐவர் மலை அடி வாரம் வெண்முகில் இறங்கிய மலை உச்சியிலிருந்து மழை நீர்  வழிந்தோடும் அழகு ஐவர் மலைக்கே  உரியது.  எந்த திசையில் இருந்து  பார்த்தாலும் கம்பீரமாக காட்சி  அளிக்கும். ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு சமணபள்ளி இருந்த இடமாக போற்றப்படுகிறது.  இந்த ஐவர் மலையை சுற்றிலும் விவ சாய பூமிகள் நிறைந்தது.  பல கிராம மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பு டன் வாழ்ந்து வருகின்றனர்.  இந்  நிலையில் பழனி ஐவர் மலை,  அடிவாரத்தில் வடக்கு தாதநாயக் கன்பட்டி என்ற கிராமத்தில் பழத்  தோட்டம் அமைப்பதாக கூறி சுவா  என்ற கார்ப்பரேட் நிறுவனம் 250  ஏக்கர் நிலங்களை வாங்கி தற்போது வெடி மருந்து தயாரிக்கும் தொழிற்  சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.  இந்த தொழிற்சாலை அமைந்தால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால்  10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மடியும் நிலையும்,  சமணப் படுகை  உள்ள ஐவர் மலை அழியும் பேராபத்தும் ஏற்படும்.   மேலும் இந்த தொழிற்சாலை யில் இருந்து வெளிப்படும் சல்பர் டை ஆக்சைடு வேதிப்பொருள் நீர்  மற்றும் காற்றுடன் கலந்தால் அமில  மழை பொழிந்து மனிதர்களும் விலங்குகளும் பல உயிர்களும் அழிவை நோக்கும் ஆபத்து உள்ளது.  

உலக பிரசித்தி பெற்ற முரு கன் கோவிலும் அதன் தொன்மை யும் தமிழ்நாட்டின் பெருமையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.  அத்தோடு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தின் லாப வெறிக்கு பழனி  நகரமே இரையாகும் பேராபத்து ஏற்படும்.  இந்த வெடி மருந்து தயா ரிக்கும் தொழிற்சாலைக்கு எதிராக விவசாய பெருங்குடி மக்களும் பொதுமக்களும் ஜனநாயக இயக்  கங்களும் பல கட்ட போராட்டங் களை முன்னெடுத்து வருகின்றனர்.   சமீபத்தில் மாவட்ட ஆட்சி தலை வர் மற்றும் அதிகாரிகள் தலைமை யில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் பழனி வட்டார பொது மக்கள் ஒருமித்த குரலில் வெடி மருந்து தொழிற்சாலைக்கு அனு மதி வழங்கக் கூடாது என தங்களது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.  மேலும் 2021 ஆம்  ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் இந்த தொழிற்சாலைக்கு எதிரான கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது என்பதையும் தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகி றேன்.  எனவே தமிழ்நாடு முதல மைச்சர் இப்பிரச்சனையில் உடனடி யாக தலையிட்டு பழனி நகரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் வாழும் மக்களின் உயிரையும்  வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உலக சுற்றுலா நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பழனி நகரை யும்,  முருகன் கோவிலையும்,  ஐவர்  மலையையும்,  பாதுகாக்கும் வகை யில் சுவா என்ற வெடி மருந்து தயா ரிக்கும் தொழிற்சாலைக்கு தமிழ்  நாடு அரசு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதை தெரி வித்துக் கொள்கிறோம்.  இதற்கு  தாங்கள் சம்பந்தப்பட்ட திண்டுக் கல் மாவட்ட நிர்வாகத்திற்கு தக்க உத்தரவினை பிறப்பிக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.