districts

img

டி.பி. ஜெயின் கல்லூரி மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்தக் கூடாது கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 19 - டி.பி.ஜெயின் கல்லூரி மாணவர் சேர்க்கையை எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வலி யுறுத்தியுள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் டி.பி.ஜெயின் அரசு உதவிப் பெறும் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதே கல்லூரியில் சுய நிதிப் பாடப்பிரிவுகளும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக அரசு உதவிப் பெறும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை நிர்வாகம் நடத்தவில்லை. இவ்வாறு 3 ஆண்டுகள் தொடர்ந்தால் அரசு உதவி பெறும் கல்லூரி தனியார் கல்லூரி யாக மாறும். இதனை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம், கல்லூரி பாதுகாப்புக்குழு தொடர் போராட்டங்களை நடத்தி யது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் நேரடியாக முதல மைச்சரை சந்தித்தும் இதுகுறித்து பேசினார். இந்நிலையில், ஆகஸ்ட்12 அன்று கல்லூரியை நிர்வகிக்க பேரா. சந்தோஷ் டி சுரானா-வை தனி அதிகாரி யாக அரசு நியமித்தது. இதையடுத்து தனி அதிகாரி, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை இணையம் மற்றும் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார். ஆனால் இணைய தளத்தில் விண்ணப்பம் பெறமுடி யவில்லை. விண்ணப்பம் வாங்கச் சென்ற மாணவர்களை நிர்வாகம் திருப்பி அனுப்பியது. இந்நிலையில், கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராவணனை புதனன்று (ஆக.17) சந்தித்து இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த், செயலாளர் ரா.பாரதி ஆகியோர் மனு அளித்தனர்.  

அதில், “தனி அதிகாரியை பணி செய்ய விடாமல் கல்லூரி நிர்வாகம் முடக்கி வைத்துள்ளது. விண்ணப்பம் கோரி சென்ற மாணவர்களை தகாத வார்த்தைகளில் வசைபாடி திருப்பி அனுப்பியுள்ளனர். சட்ட விரோத மாக செயல்படும் டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்ற வியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு சேர்க்கை விண்ணப்பம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தனர். இந்நிலையில், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது முகநூல் பதிவில், “டி.பி.ஜெயின் கல்லூரி மாணவர் சேர்க்கையை கல்லூரி நிர்வாகமே நடத்திக் கொள்ளலாம். தமிழக அரசு நியமித்த சிறப்பு அதிகாரி தலையிடக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசு உரியமுறையில் ஒட்டு மொத்த வழக்கை சட்ட ரீதியாக கையாளும் என நம்புகிறோம். மாணவர் சேர்க்கையை எக்கா ரணம் கொண்டும் தாமதப்படுத்தக் கூடாது. அரசு நிதி உதவி பெறும் பாடப் பிரிவு சம்பந்தப்பட்ட இடங்களை நிரப்பும்போது அதற்குரிய விதிமுறை கள், கட்டண விகிதம் பின்பற்றப்படு வதை கல்லூரி கல்வி இயக்குநரகம் உறுதி செய்ய வேண்டும். அவற்றுக் கான ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.