கடலூர், டிச.27- நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு நிலம்கொடுத்த வர்களுக்கு வேலை கிடைக்க மாநில அரசு தலையிடவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். நெய்வேலி நிலக்கரி நிறு வனத்திற்கு நிலம் கொடுத்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கக்கோரி அனைத்துக்கட்சிகள் சார்பில் திங்களன்று (டிச.26) நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் இது போன்ற எழுச்சிமிகு பொதுக்கூட்டம் இதுவரையில் எங்கும் நடந்தது இல்லை. மோடியை எதிர்த்து தான் களம் கண்டிருக்கின்றோம். விவசாயி களுக்காக போராடுகிறோம். 1952 ஆம் ஆண்டு என்.எல்.சி நிறு வனம் துவங்கப்பட்டதிலிருந்து 75 ஆயிரம் பேர் பணி முடித்து ஓய்வு பெற்றிருப்பார்கள். நிறுவனத்திற்கு அடிப்படையே விவசாயிகள் கொடுத்த நிலம் தான். என்எல்சி மின்சாரத்தால் வட மாநிலங்கள் பிர காசமாக உள்ளன. இதற்கு காரண மான விவசாயிகளுக்கு வேலை யில்லை, உரிய நஷ்ட ஈடு இல்லை.
பட்டா கொடுக்க 60 ஆண்டுகள்
1952 ல் நிலம் கொடுத்த விவசாயி களுக்கு விருத்தாசலம் அருகே வீட்டுமனை பட்டா வழங்குவதாக இப்போது என்எல்சி தலைவர் அறிவிக்கிறார். 60 வருடங்களாக பட்டா கூட கொடுக்காமல் விவசாயிகளை பழிவாங்கியுள்ளனர். நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை கூட பல தவணைகளாக வழங்குகிறார்கள். இதனால் அந்தப் பணத்தை வைத்து உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை.
வேலை வாய்ப்பு மறுப்பு
என்எல்சி நிறுவனம் 1979க்கு பிறகு 27 ஆயிரம் பேரிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. 60 ஆண்டு கால சரித்திரத்தில் 27 ஆயிரம் விவசாயிகளில் 1,837 பேர் தான் நிரந்தர வேலை பெற்றுள்ள னர். அதுவும் 1990ம் ஆண்டு இந்தப் பகுதி மக்களை திரட்டி போராடி நீதிமன்றத்திற்கு சென்றதன் விளை வாக வழங்கப்பட்டன. நிலம் கொடுத்த அனைத்து விவசாயிகளுக்கும் நிரந்தர வேலை வழங்கவேண்டும். வேலை வழங்குவதற்கு நிறைய வாய்ப்பு கள் உள்ளன. புதியதாக இரண்டு யூனிட்டுகள் நெய்வேலியில் துவங்கி உள்ளனர். அதிலே கூட ஆயிரம் பேருக்கு மேல் வேலை வழங்கலாம். ஆனால் வேலை வாய்ப்பை நிறு வனம் மறுத்து வருகிறது. இந்த கோரிக்கைகள் மீது தமிழக முதல மைச்சர் தலையிடவேண்டும்.
புதிய நாடகம்
இந்தநிலையில் என்எல்சி நிறு வனத்திற்கு நிலம் கொடுத்தவர்க ளுக்கு நியாயம்கேட்டு நடை பயணம் செல்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்லி இருக்கிறார். உண்மையிலேயே அவர் நடை பயணம் போக வேண்டும் மக்களை எல்லாம் திரட்டி கொண்டு மோடி வீட்டிற்கு செல்ல வேண்டும். ஏனென்றால் அவர்கள் கையில் தான் நிலக்கரித்துறை உள்ளது. தீர்வு காணவேண்டியவர்கள் அவர்கள்தான். மாநில அரசுக்கும் பொறுப்பு: பரந்தூரில் மத்திய அரசு வேலை தர மறுத்தால் மாநில அரசு வேலை தரும் என்று அமைச்சர்கள் தெரி வித்துள்ளனர். அதேபோல் ஒன்றிய அரசை கட்டாயப் படுத்துங்கள்; வேறு வழியில்லை என்றால் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மாநில அரசு நிறுவனங்களில் வேலை வழங்க நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார். இந்தகூட்டத்தில் இரா.முத்தரசன் (சிபிஐ) தொல்.திருமாவளவன் (விசிக) தி.வேல்முருகன் (தவாக எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக) எம். ஆர்.ராதாகிருஷ்ணன்( விருத்தாசலம் காங். சட்டமன்ற உறுப்பினர்) துரை சந்திரசேகர்(திக) ,ஜி.ராஜி] (மக்கள் அதிகாரம்) ஆகியோர் பேசினர். சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் டி.மணிவாசகம் நன்றி கூறினார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பி னர் சிந்தனைச் செல்வன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம், விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். கே .சரவணன், மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.