tamilnadu

img

நிவர் புயல்: வெள்ளக்காடானது கடலூர்...

கடலூர்:
நிவர் புயலால் பெய்த கன மழையினால் கடலூர் மாவட்டம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்கு வரத்து தடைபட்டது. காலை 8 மணி நிலவரப்படி கடலூரில் அதிகபட்சமாக 28 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் பார்க்குமிடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

கடலூர் புதுப்பாளையம், வண்டிப்பாளையம்,  வண்ணார பாளையம், தேவனாம்பட்டினம், மணலி எஸ்டேட்,  தானம் நகர், நவநீதம் நகர், செல்லங்குப்பம், கடலூர் முதுநகர், மார்கெட் காலனி, செம்மண்டலம் மற்றும் கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து உள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.விரைந்து மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கணக்கெடுப்பு

நிவர் புயல்லால் பாதிக்கப்பட்ட பயிர்களை இன்றே கணக்கெடுக்கும் பணி துவக்கம் வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கடலூரில் தெரிவித்தார்.நிவர் புயல் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ககன் தீப் சிங் பேடி கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிப்புகளை ஆராய்ந்து வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிவர் புயல் கடலூர் மாவட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை, இருந்தாலும்  தாழ்வான நிலப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை படிப்படியாக சரி செய்யப்பட்டு மின் வினியோகம் செய்யப்படும்” என்றார்.புயலால் அனைத்து வகையான பயிர்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இரண்டு மூன்று நாட்களில் தண்ணீர் வடிந்து விடும் பெரிய பாதிப்பு இருக்காது என்று நினைக்கிறோம். இருந்தாலும் நிவர் புயலினால் பயிர்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை  இன்று முதல் கணக்கிட அலுவலர்கள் சென்றுள்ளனர். மேலும் இம்மாதம் இறுதிக்குள் பயிர் காப்பீடு  செய்துகொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

;