கடலூர், நவ.16- கடலூர் கம்மியம் பேட்டையில் உள்ள குப்பை கிடங்கை அப்புறப்படுத்தி, பூங்காவாக மாற்றக் கோரி அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாவடியில் புறக்காவல் நிலையம், நெல்லிக்குப்பம் சாலையில் நடுதடுப்பு உடனடியாக ஏற்படுத்த வேண்டும், கோண்டூரில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், கெடிலம் ஆற்றில் சர்க்கரை ஆலை கழிவுகள் விடுவதை நிறுத்த வேண்டும், கம்மியம் பேட்டை, கூத்தப்பாக்கம் ரயில்வே மேம்பாலப் பணி களை அறிவித்தபடி உடனடி யாக துவக்க வேண்டும், மரணக் குழிகளாக பலி வாங்க காத்திருக்கும் ஜவன்ஸ் பவன் சாலையை உடனடியாக சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. கடலூர் தபால் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். பொதுச் செய லாளர் எம்.மருதவாணன், நிர்வாகிகள் டி.புரு ஷோத்தமன், கிருஷ்ண மூர்த்தி, தேவநாதன், ரவிச்சந்திரன், மணி வண்ணன், கலியசாமி, அப்பாதுரை, தேவநேசன், கண்ணன், ராஜசேகர், காசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்பாட்ட த்தை துவக்கி வைத்து முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வி.சுப்புராயன் பேசினார். சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் வாழ்த்துரை வழங்கினார்.