districts

img

கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து கிளை மேலாளரைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

பேருந்து நடத்துநரை 5நாள் தொடர்ந்து பணியாற்றி 6 ஆம் நாளும் பணியாற்றச் சொல்லும் கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து கிளை மேலாளரைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் 

கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக கிளை பணிமனையில்  ஓட்டுநர், நடத்துநர் தொழில்நுட்ப பணியாளர்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் .இப்பணி மனையில் போதுமான அடிப்படை வசதி இல்லாமலும் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையே பணியாற்றும் நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அன்புச் செழியன் என்கின்ற நடத்துநரைச் சென்னைக்குச் சென்று வரப் பணி அமர்த்தி அதனைத் தொடர்ந்து பணியில் ஐந்து நாள் பணியாற்றி விட்டு ஆறாம் நாள் கும்பகோணத்திற்கு வருகை தந்தார்.

அப்பொழுது கிளை மேலாளர் சேகர் என்பவர் திரும்பவும் பேருந்தை கலக்சன் குறைவாக உள்ளது ஆகையால் சென்னைக்குச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டார் இதனை அடுத்து நடத்துநர் அன்புச் செழியன் தொடர்ந்து ஐந்து நாள் பணியாற்றி வந்து வருகிறேன் எனக்கு ஓய்வு வேண்டும் எனக் கேட்டுள்ளார்.  இதனை மறுத்து அலட்சியப் போக்கில் அதிகாரத்துடன் நீ வேலைக்குப் போகவில்லை என்றால் உன் மீது நடவடிக்கை எடுப்பேன் என அச்சுறுத்தியுள்ளார்.இதனால் தொழிலாளர்களை அலட்சியப்படுத்தி அதிகாரத்தின் பெயரில் தொழிலாளர்களுக்கு விரோதமாக  நடத்தும்  கிளை மேலாளர் சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து கிளை அலுவலகம் முன்பு சக அனைத்து தொழிலாளர்களும் வேலையை நிறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஐந்து நாள் வேலை பார்த்து ஆறாம் நானும் தொடர்ந்து ஓய்வு கொடுக்காமல் வேலை பார்க்கக் கட்டாயப்படுத்தும் கிளை மேலாளர் சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேல் அதிகாரிகள் இது சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனைத் தொடர்ந்து கோட்ட துணை மேலாளர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் கிளை மேலாளர் சேகர் கூறியது தவறுதான் என்றும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் இனி தொழிலாளர்களுக்கு இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் உறுதி அளித்தனர் இதனால் போராட்டம் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது