districts

img

செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஏப்.11- தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்கை கடைப் பிடிப்பதோடு, ஒழுங்கு நட வடிக்கைகளுக்கும் உள் ளாகி வரும் செங்கல்பட்டு வீட்டு வசதி துணைப் பதி வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்  கோட்டையில் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. செங்கல்பட்டு வீட்டு வசதி துணைப் பதிவாளராக உள்ளவர் மு.உமாதேவி. இவர் தொடர்ந்து தனக்கு கீழே பணியாற்றும் ஊழி யர்களை தரக் குறைவாகப் பேசி ஊழியர் விரோதப்  போக்கை கடைப்பிடிப்ப தாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. மேலும், இவர்மீது 6 ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அர சுக்கும் கூட்டுறவுத் துறைக்  கும் தொடர்ந்து அவப்பெயரை ஏற்படுத்தி வரும் துணைப் பதிவாளர் உமாதேவி மீது  உரிய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்  டல இணைப் பதிவாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாவட் டத் தலைவர் விகேஏ.மனோ கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி. வினிதா முன்னிலை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில  செயற்குழு உறுப்பினர் பா. ஆனந்தம், ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் மு. முத்தையா, பொருளாளர் கி. ஜெயபாலன், அரசு ஊழியர்  சங்க மாவட்ட துணைத் தலை வர் கருப்பையா உள் ளிட்டோர் பேசினர். மாவட்ட  துணைத் தலைவர் பூங்கா வனம் நன்றி கூறினார்.