tamilnadu

தீட்சிதர்களின் கொள்ளை கூடாரமான நடராஜர் ஆலயத்தை கையகப்படுத்துக தமிழக அரசுக்கு சிபிஎம் வேண்டுகோள்

கடலூர்,செப். 14- சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் அந்த ஆலயத்தை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  கடலூர் மாவட்டத்தின் வர லாற்றுச் சிறப்புமிக்க ஆலயமான நடராஜர் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் நடத்த தீட்சிதர்கள் அனுமதித்த  செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு கண்டிப்பதுடன் ஆகம விதிகளைக் காரணம் காட்டி, இந்த ஆலயத்தை அரசு  கையகப்படுத்தக்கூடாது என்று வாதிட்ட தீட்சிதர்கள் எந்த ஆகம விதிப்படி ஆயிரங்கால் மண்ட பத்தில் திருமணம் நடத்த அனுமதி அளித்தார்கள்  எனக் கேள்வி எழுப்புகிறது.  சோழ மன்னர்கள் துவங்கி கிருஷ்ணதேவராயர் வரை இந்த ஆலயம் பல மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டு களைக் கடந்து நிற்கும் இந்த ஆலய த்தின் ஆயிரங்கால் மண்டபத்தின் வரலாற்றில் இல்லாத அளவு பட்டாசுத் தொழிலதிபர் இல்ல திரு மணம் ஆடம்பரமாக நடந்துள்ளது. பல லட்சம் கைமாறிய பின்பே இந்த ஆடம்பர அலங்காரங்கள் உள்ளே நடந்துள்ளது. கோயிலினுள் பல நாட்கள் அலங்கார வேலைகள் நடக்க எப்படி அனுமதித்தார்கள்? பராந்தக சோழன் வேய்த பொற்கூரையின் மீது அமர்ந்து அலங்காரம் செய்யும் அளவு தீட்சி தர்கள் தரம் தாழ்ந்து செல்ல காரணம் என்ன? நான்கு வீதிகளை கடந்து கோபுரங்களுக்கு நுழைய வேண்டுமென்றால் காலில் காலணி கள் அணிந்து செல்ல அனு மதியில்லை. தெரியாமல் சென்ற பல பொதுமக்கள்  தீட்திதர்களிடன் வசைச்சொற்களாலும், ஏன் அடியும் கூட வாங்கியதுண்டு. ஆனால் இந்த திருமணத்தில் அயிரங்கால் மண்டபத்தில் காலணிகள் அணிந்து நூற்றுக்கணக்கானோர் உலாவும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆலயத்தினும் ஆலய பிரசாதம் தவிர வேறு உணவு பண்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாத சூழலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அறுசுவை திருமண விருந்து நடந்தது எப்படி? விலை உயர்ந்த திரைச்சீலைகள் கொண்டு தரிசனம் நிகழும் ஆனி திருமஞ்சனத்தின் போது கூட ஆயிரங்கால் மண்டபம் அலங்கரிக்கப்பட்டதில்லை. மேலும் ஆனித்திருமஞ்சனம், திருவாதிரை என ஆண்டுக்கு இரண்டு முறை யும், நாட்டியாஞ்சலி நடக்கும் காலங்களில் மட்டும் திறக்கப்படும் இம்மண்டபம் தொழிலதிபர் வீசிய பணத்திற்காகத் திறந்ததை ஆகமம் தடை சொல்லவில்லையா? மேலும் இந்த கோவிலின் வரவு செலவு கணக்குகளை அவர்களே நிர்வகிப்பதால் மக்கள் பணம் எந்த கணக்கும் இல்லாமல் சுரண்டப்படுகிறது. இந்த கோவிலின் வருமானத்தை அறிந்துகொள்ள கீழ்க்காணும் விபரங்கள் போதும். சிதம்பரம் நடராஜர் ஆலயம் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி முதல்  27.10.2014 வரை இந்து அறநிலையத்துறையால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது கோயிலின் பல இடங்க ளில் உண்டியல் வைக்கப்பட்டி ருந்தது. அந்த உண்டியலில் காணிக்கை செலுத்தவேண்டாம் என்று தீட்சிதர்கள் மறைமுகமாகப் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் அந்த உண்டியல்களிலும் காணிக்கை செலுத்தினர். அந்த ஐந்தாண்டுகளில் எல்லா செலவுகளும் போக நிலை முதலீடாக 3 கோடியே 15 லட்சத்து 24 ஆயிரத்து 527 ரூபாயும், சேமிப்பு வங்கியில் 17 லட்சத்து 16 ஆயிரத்து 142 ரூபாய் வந்தது. இதுவல்லாமல் 322.5 கிராம் தங்கமும், 1470 கிராம் வெள்ளியும்,  2.5 செண்ட் வைரமும் இருந்தது.  இவையெல்லாம் உதவி ஆணையர் சி.ஜோதி, செயல் அலுவலர் க.முருகன், ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. (தீக்கதிர்: 29.09.2014) ஆலய வருமானத்தின் ஒரு சிறிய தொகைதான் இது. இப்படி கோடி கோடியாய் பக்தர்கள் கொடுக்கும் இப்படிப்பட்ட வசூலுக்கு எந்தவித கணக்கும் இல்லை. கடுமையான முறைகேடுகள் நிர்வாகத்தில் நடக்கிறது. இப்படி வருமானத்திற்கு கணக்கில்லாத நிலை ஒருபக்கம் இருந்தாலும் இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து இந்த ஆலயத்தை மீட்கவும், திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாட அனுமதி மறுத்து, பாட முயன்றவர்களைத் தாக்கியதற்கும் தீட்சிதர்கள் கூறிய காரணம் ஆலயத்தின் ஆகமம். ஆனால் எந்த ஆகமத்தின் அடிப்படையில் இப்போது இந்த விதி மீறல்கள் நடந்தது என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்க விரும்புகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதியும், மக்கள் பணம் மக்களுக்கே பயன்படும் வகை யில் இந்த ஆலயத்தைக் காசிவிஸ்வ நாதர் ஆலயத்திற்குச் சிறப்புச் சட்டம் கொண்டுவந்து அரசு கையகப்படு த்தியதுபோல  கையகப்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.        இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;