states

மின்துறை தனியார் மயமாக்குவதை கைவிடுக புதுச்சேரி முதலமைச்சருக்கு சிபிஎம் வேண்டுகோள்

புதுச்சேரி,டிசம்பர்.21- புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை  அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், தற்போதுள்ள எந்தவொரு அரசுக்கு சொந்தமான விநியோக உரிமதாரரை யும் தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. அவை முந்தைய காலங்களைப் போலவே செயல்படும். எந்த வொரு சொத்தையும் உரிமையையும் (மின் விநியோகம்) மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் கூறி யுள்ளார். ஒன்றிய அரசே எந்த ஒரு மாநில மின் விநியோகத்துறையும் தனியார்மய மாக்க போவது இல்லை என்று அறி வித்துள்ளதால் புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு மின்துறை தனியார்மயமாக்கும் நட வடிக்கையை கைவிட வேண்டும். ரூ.30 ஆயிரம் கோடி புதுச்சேரி மக்க ளின் சொத்தை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு முகவர்களாக வேலை செய்யக் கூடாது. தனியார் நிறு வனங்களுக்கு ஆதரவாக பல்வேறு பொய்களை நீதிமன்றத்தில் தெரிவித்து எப்படியாவது மின்துறையை விற்க வேண்டும் என்று செயல்படும் தலைமைச் செயலாளர், மின்துறை செயலர்  மற்றும் சில மின்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.