tamilnadu

img

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஒத்திவைப்பு - தில்லி நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மீண்டும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளாகி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதற்கிடையே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பில் தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை மீண்டும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

;