tamilnadu

img

சிட்டா-அடங்கல் இருந்தாலே நகைக்கடன்

விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் சிட்டா,  அடங்கல் மட்டுமே பெற்றுக் கொண்டு விவசாயி களுக்கு நகைக்கடன் தொடர்ந்து வழங்கப்ப டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்  கே.ராஜூ கூறினார்.

சட்டப்பேரவையில் வியாழனன்று (மார்ச் 19)  கூட்டுறவுத்துறை மானியத்தின் மீது நடை பெற்ற விவாதம் வருமாறு:

சவுந்தரபாண்டியன் (திமுக): கூட்டுறவு சங்கங்களில் ஏற்கெனவே கடன் பெற்றவர்க ளுக்கு மட்டுமே மீண்டும் கடன் தரப்படுகிறது. மத்திய அரசு சட்டப்படி சொத்து பத்திரத்தை அடமானம் வைத்தால்தான் நகைக்கடன் தரப்படம் என்று கூறப்படுகிறது. எனவே, நகைக் கடன் தொடர்ந்து வழங்கப்படுமா?

அமைச்சர்: தமிழகத்தில் சிட்டா, அடங்கல்  இருந்தாலே நகைக்கடன் வழங்கப்படுகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டப்படி அடமான சான்று கொடுத்தால்தான் நகைக்  கடன் தர முடியும். இதிலிருந்து மாறுபட்டு வேளாண் கடன் அட்டை (கேசிசி) வைத்தி ருந்தாலே 3 லட்சம் ரூபாய் வரை நகைக்கடன் வழங்கப்படுகிறது. அடமானச்சான்று தரத் தேவையில்லை. இந்த நகைக்கடன் வேளாண் கடனாக மாற்றித் தருகிறோம். நகைக்கடன் பெற அடமானச்சான்று அளிக் கும் விவகாரம் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் சுமார் 3 லட்சத்து 70ஆயிரம் கேசிசி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்  கடன் தொடர்ந்து வழங்கப்படும். 2020-21 நிதி யாண்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண்  கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே, அனைவருக்கும் கடன் வழங்கப்படும்.

சவுந்தரபாண்டியன்: தொடக்க வேளாண்  கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய்  பெற்றால் 2 விழுக்காடு டிடிஎஸ் கட்ட வேண்டும்.  அந்த தொகை விவசாயிகளுக்கு வழங்கப்ப டும் கடனில் இருந்து பிடிக்கப்படுமா? அல்லது  கூட்டுறவு சங்கங்களே செலுத்துமா?

அமைச்சர்: இது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

எஸ்.பாண்டி (காங்.): கூட்டுறவுத்துறை ஊழி யர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

அமைச்சர்: தொடக்க கூட்டுறவு சங்கங்க ளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூ தியம் கொடுக்கும் அளவிற்கு நிதிநிலை இல்லை. இருப்பினும், இது குறித்து ஆராய  ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.