அரியலூர், செப்.24- மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து எல்ஐசி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் எம்.தர்ம லிங்கம் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்செழியன் நீலமேகம் செல்வராஜ் முருகானந்தம் செல்லமுத்து பாண்டியன் காளிதாசன் கணேசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.சிற்றம்பலம் முதல்நிலை அதிகாரிகள் சங்கம் கேஜி சந்திரகுமார் ராம்ஜி ஊழியர்கள் சங்க துணைத்தலைவர் எஸ்சி எஸ்டி பிரிவு சுகவனேஸ்வரர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். நிறைவாக லிங்க் கிளை செயலாளர் கே.கிருஷ்ணன் நன்றி கூறினார்.