tamilnadu

img

இந்திய அணியின் ஷிகர் தவான் உலக கோப்பை தொடரில் இருந்து விலகல்

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் கோல்டர் நைல் வீசிய பந்து, தவானின் இடது கையில் ஓங்கி அடித்தது. அப்போது தவானுக்கு மைதானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, பின்பு தொடர்ந்து விளையாடினார். இருப்பினும், ஃபீல்டிங் செய்ய அவர் வரவில்லை. அவருக்குப் பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார். 

இதை அடுத்து, காயம் குறித்து மருத்துவ பரிசோதனை செய்ததில், தவானுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் இன்னும் மூன்று வார காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், வரும் 13-ஆம் தேதி, நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள போட்டியில், இந்திய அணியில், தவானுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ரிஷப் பந்த் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.