ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
மெல்பர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் முதல இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து, நான்காம் நாளில் 105 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி அந்நாளின் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 228 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இன்று ஐந்தாம் நாளில் விளையாடிய ஆஸ்திரேலியா மேலும் 6 ரன்கள் எடுத்ததும் எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்தது. 2ஆவது இன்னிங்ஸில் அந்த அணி 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பின்னர் 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்கை துரத்திய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 84, ரிஷப் பந்த் 30 தவிர்த்து மற்ற இந்திய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். டிரா ஆகும் என எதிர்பார்க்கட்ட நிலையில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்கிஸில 155 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜன. 3ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.