விருதுநகர்:
தமிழக அரசு, சிறு,குறு விவசாயிகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். பதிவு செய்த அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவது என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் 100க்கு மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றினர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன், மாவட்டச் செயலாளர் வி.முருகன், மாவட்ட பொருளாளர் மனோஜ்குமார், மாவட்ட நிர்வாகிகள் குமராண்டி, பெருமாள், மங்கையற்கரசி, முனியசாமி மற்றும் வட்டச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி மதுரை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்தார்.