tamilnadu

img

முஸ்லிம் என்பதற்காக குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது...

கொல்கத்தா:
வன்முறைகளில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது பாரபட்சமின்றி நட வடிக்கை எடுக்குமாறு வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி அம்மாநிலத்தின் முஸ்லிம் பிரமுகர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.மேற்குவங்கத்தில் இருக்கும் சுமார் 25 சதவிகித முஸ்லிம் வாக்குவங்கியை, கருத்தில்கொண்டு, முதல்வர் மம்தா பானர்ஜி முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது. மம்தாவும் தனது நடவடிக்கைகள் மூலமாக அதனை நிரூபித்து வந்தார். மம்தாவின் இந்த வாக்குவங்கி அடிப்படையிலான முஸ்லிம் ஆதரவு, அண்மைக் காலத்தில் பெரும்பான்மை இந்துக்களை பாஜக பக்கம் கொண்டு சேர்த்து, மக்களவைத் தேர்தலில் அக்கட்சி 18 இடங்களில் வெற்றி பெறுவதற்கும் அதுவே காரணமாகி விட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில், கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 82 வயது சயீத் என்ற முதியவர் மரணமடைந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் என்.ஆர்.எஸ். மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவர்கள், பணி யாளர்களை கொடூரமாகத் தாக்கினர். இதனால் மருத்துவர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற உஷோஷி சென்குப்தா நண்பருடன் உபேர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரது வாகனத்தை வழிமறித்து ஓட்டுநரை கடுமையாக தாக்கியது. இந்நிலையில், தாங்கள் பாதிக்கப்பட்ட போது அருகில் இருந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீசாரும் உதவிக்கு வரவில்லை என சமூகவலைதளங்களில் உஷோஷி சென்குப்தா பதிவிட்டிருந்தார். 

அடிப்படையில், இந்த இரு சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் முஸ்லிம்கள்என்பதாலேயே, மம்தா நட வடிக்கை எடுக்க மறுத்துவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக, மருத்துவர்கள் போராட்ட விஷயத்தில் மம்தா காட்டிய பிடிவாதம் பலரா லும் கண்டிக்கப்பட்டது.இந்நிலையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முஸ்லிம்கள் உட்பட யாராக இருந்தாலும்; அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என்று கொல்கத்தா வைச் சேர்ந்த முஸ்லிம் கல்வியாளர்கள் இம்ரான் ஜாகி, மமூம் அக்தர், சமூக செயற்பாட்டாளர் முதார் பதேர்யா உள்ளிட்ட 53 பிரமுகர்கள், மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 

“அண்மையில் நடைபெற்ற இரண்டு வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எங்கள் சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் - முஸ்லிம்கள். இதற்காக நாங்கள் வருந்துகிறோம். இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டு கிறோம். இதில் மட்டுமல்ல முஸ்லிம்கள் எந்த ஒரு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். ஏனெனில் முஸ்லிம்கள் என்பதற்காகவே குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள் என்கிற எண்ணம் வளர்ந்துவிடக் கூடாது. இப்படியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் தான் நாம் தவறு செய்தாலும் காப்பாற்றப்
படுவோம் என்ற நம்பிக்கை முஸ்லிம் களிடத்தில் வளராமல் இருக்கும்” என்று கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.