tamilnadu

கூலி குறைப்பைக் கண்டித்து நெசவாளர்கள் ஜூன்.8-இல் வீடுகளில் கருப்புக் கொடி

அருப்புக்கோட்டை, ஜூன் 3- அருப்புக்கோட்டையில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் உள்ளன. சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு சேலை நெய்வதற்கு ஏற்ப கூலி வழங்கப்பட்டு வருகிறது. ஊர டங்கு காலத்தில் ஒரு சேலைக்கு ரூ.20 வரை கூலி குறைக்கப்பட் டது. இதனால் நெசவுத் தொழி லில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.  இதுகுறித்து சிஐடியு சார்பில் தொழிலாளர் நலத்துறை, காவல் துறைக்கு புகார் மனு அளிக்கப் பட்டது. ஆனால், பழைய கூலி யை வழங்க ஆலை நிர்வாகத்தி னர் மறுத்து வருகின்றனர். இதை யடுத்து சிஐடியு நிர்வாகிகள், நெவாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பழனிச் சாமி தலைமையில் நடைபெற் றது. சிபிஎம் நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம்.அசோ கன் சிஐடியு கன்வீனர் ராஜா ஆகி யோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பழைய கூலியை வழங்க வலியுறுத்தி ஜூன்.8-ஆம் தேதி விசைத் தொழிலாளர்கள்  வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்றுவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.