திருப்பூர், மே 19 - பிஎஸ்என்எல் தொலைத் தொடர்புத் துறையில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பல மாதங்களாக வழங்காமல் இருக்கும் ஊதியத்தை வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட் டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொலைபேசி நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை உதவித் தலைவர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். இப்போராட் டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவிச் செயலாளர் எம்.காந்தி, ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சண்முகசுந்தரம், ஓய்வூதியர் சங்க கிளை செயலாளர் எம்.முருகசாமி, பரமசிவம் ஆகியோர் உறையாற்றினர். இறுதியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கக் கிளை பொருளாளர் சி.முருகானந்தம் நன்றி கூறினார். இதேபோல், திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்தத் தொழி லாளர் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், கனகராஜ் ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில், மாநில நிர்வாகி எம்.முத்துக்குமார், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி ஆர்.வின்சென்ட், ஓய்வூதியர் சங்க மாநில நிர்வாகி பி.சௌந்தரபாண்டியன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் கே.வாலீசன் உள்ளிட்டோர் உரையாற் றினர். நிறைவாக கிளைச் செயலாளர் என்.குமரவேல் நன்றி கூறினார். முன்னதாக திரளானோர் கலந்து கொண்டு கருப்புக் கொடி ஏந்தி, மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.