விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது தம்பிபட்டி ஊராட்சி. இங்குசாலையின் இருபுறமும் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பால் கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டுநடைபாதையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பால் 17 வருடங்களாக தம்பிபட்டி கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயம் பாதிக்கப் பட்டுள்ளது எனக் கூறி தம்பிபட்டி மக்கள் தேசியக் கொடியை கைகளில் ஏந்தி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.