தேனி:
கம்பத்தில் சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 68 சமுதாய அமைப்புகள் சார்பில்,தெருக்களில் கருப்பு கொடி கட்டி, அதிமுகவை வீழ்த்துவோம் என வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்கினர்.
கம்பத்தில் சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 68 சமுதாய அமைப்புகள் சார்பில், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கௌதமன், மாநில இளைஞரணிச் செயலாளர் ஜெயக்குமார், மாநில மாணவரணி துணைச் செயலாளர் கவியரசன், மாவட்டப் பொருளாளர் தாவிது ராஜா, கம்பம் நகர செயலாளர் காளீஸ்வரன் உட்பட சீர்மரபினர் அமைப்பினர் தெருக்களில் கருப்புக்கொடி கட்டி அதிமுக அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மேலும் “சீர்மரபினர் மக்களின் உரிமையை அழித்தவர்கள், ஏமாற்றியவர் என முதல்வர் எடப்பாடி, ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களின் படங்களைப்போட்டு “அதிமுகவை” வீழ்த்துவோம் என துண்டுப் பிரசுரம் வழங்கி வருகின்றனர்.