விழுப்புரம், ஏப். 4-
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் ஸ்பார்க்ஸ்-2019 ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழு துணைப் பதிவாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் அருண்குமாரி வரவேற்றார்.நிகழ்ச்சியில் ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு ‘பெண் கல்வியின் அவசியம், வளர்ச்சி, பெண்களின் எழுச்சி, சுதந்திரம், பெண் சாதனையாளர்களின் வரலாறு’ குறித்து பேசினார்.தொடர்ந்து கல்வியில் சிறப்பிடம் பெற்ற இளங்கலை மூன்றாமாண்டு மாணவி பிரித்தா, முதுகலை இரண்டாமாண்டு மாணவி அஷ்வினி ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் லேப்டாப் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. முடிவில் கல்லூரி துணை முதல்வர் செல்வி நன்றி கூறினார்.