education

img

கல்லூரி பேராசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தும் மோடி அரசு!

புதுதில்லி:
எம்.இ., எம்.டெக். முடித்தாலே, பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிக்குச் சேர்ந்துவிட முடியாது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழு (All India Council for Technical Education -AICTE) அறிமுகப்படுத்தியுள்ள சிறப்புப் படிப்பை படித்தாக வேண்டும் என்று கல்விக்குழு தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் சஹஸ்ரபுதே மேலும் கூறியிருப்பதாவது:
புதிய விதிகளின்படி எம்.இ., எம்.டெக் படித்த பிறகு, அகில இந்தியக் கல்விக்குழு அறிமுகப்படுத்தியுள்ள ‘8 Module Course’ என்ற ஓராண்டு சிறப்புப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகச் சேர முடியும். பொறியியல் கல்லூரிகளில் ஏற்கெனவே பேராசிரியராகப் பணியாற்றுவோரும் புதிய சிறப்புப் படிப்பைப் படித்தால் மட்டுமே பேராசிரியராகத் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். பொறியியல் படிப்பின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு சகஸ்ரபுதே கூறியுள்ளார்.பொறியியல் கல்லூரிகளில், பேராசிரியர்களாகப் பணியாற்று வதற்கு, இதுநாள் வரை, எம்.இ., எம்.டெக் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புமுடித்திருந்தாலே போதுமானது. ஆனால், புதிதாக ஓராண்டு படிப்பை அறிமுகப்படுத்தி, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உதவிப் பேராசிரியர் பணியில் சேர முடியும் என்று மோடி அரசு தடாலடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.