tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபையில் தீர்மானம் கொண்டு வர மறுப்பதா?

தஞ்சாவூர், ஜூன் 29- தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 589 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களில் குடிநீர் பிரச்ச னை, கிராம சுகாதாரம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவா தித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.  பூண்டி கிராமத்தில் நடை பெற்ற கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்க ளுக்கு வழங்கி ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பேசினார். திருக்கானூர்பட்டியில் மக்க ளவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசுகை ‌யி‌ல், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும்’ என வலி யுறுத்தினார்.  இதனைத் தொடர்ந்து கிராம சபைக் கூட்ட பார்வை யாளரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான மணிகண்டன் முன்னிலை யில், “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்’’ என மத்திய, மாநில அரசுகளை வலியு றுத்தி ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு வடக்கு மற்றும் தெற்கு கிராமங்க ளில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட ஹைட்ரோ  கார்பனுக்கு எதிரான தீர் மானத்தை, பார்வையா ளராக வந்திருந்த வட்டார வளர்ச்சி அலுவலக பணி யாளர் பாலதண்டாயுதம் ஏற்க மறுத்தார். இதனால் காவல்துறை சமாதானம் செய்தும் பொதுமக்கள் ஏற்க மறுத்ததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஒக்கநாடு கீழையூர் ஊராட்சியில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ்குமார் கலந்து கொண்டார்.  பூதலூர் தாலுகா வெண்டையம்பட்டி ஊராட்சி கூட்டத்தில்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், நிர்வாகிகள் எல். ராஜாங்கம், எஸ்.வியா குலதாஸ், ஏ.முருகேசன், துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மா னம் கொண்டு வர பொது மக்கள் முயன்ற போது அரசின் கொள்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அனுமதிக்க முடி யாது என்று கூறி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெளியேறிச் சென்றார்.  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதி ராக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பல இடங்களில் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்தனர்.