பெயரூட்
மேற்காசிய நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த செவ்வாயன்று கடல்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் எதிர்ப்பாரவிதமாக வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் 137 பேர் பலியானார்கள். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். குறிப்பாக அந்த பகுதியில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.
இந்நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் அம்மோனியம் நைட்ரேட் டன் கணக்கில் இருந்தது தொடர்பாக அந்நாட்டு அமைச்சரவையை ஏற்கெனெவே பல்வேறு தரப்பினர் எச்சரித்து இருந்தனர். ஆனால் அமைச்சரவை அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால தான் வெடிவிபத்து ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தொலைக்காட்சிகளில் பரவ, ஆத்திரமடைந்த மக்கள் லெபனான் நாடாளுமன்ற நுழைவாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் தீ வைத்தும், கற்களை வீசி எறிந்தும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் கலவரத் தடுப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.