திருவள்ளூர்,நவ.19- சென்னை அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் செவ்வாய்பேட்டை ரயில் நிலை யம் அருகே ரயில்வே கேட் அமைந் துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் அருகே ஆவடி சாலையுடன் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலமானது கட்டும் பணி தொடங்கி நடந்து வந்தது. இந்த பணிகள் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் பணிகள் நிறுத்தப் பட்டு 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டு உள்ளது. இதனால் செவ்வாப்பேட்டை திருவூர், அரண்வாயில் சேர்ந்த பொது மக்கள் மருத்துவம், பள்ளி கல்லூரி உள் ளிட்ட பிற பணிகளுக்கு செல்வோர் மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்காலிகமாக செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் செல்வதற்காக ஆயத்தப்படுத்தி கொடுத்தி ருந்த நிலையில் தற்போது மழையின் காரணமாக அந்த ரயில்வே பாலத்தின் கீழ் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அவ்வழியே செல்லும் பொதுமக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவி கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் கோபமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலி யுறுத்தி வெள்ளியன்று மாலை புறநகர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை யன்று மேம்பாலம் அருகே 200-க்கும் மேற்பட்டோர் செவ்வாபேட்டை-திருவூர் செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.