கவரத்தி:
வளர்ச்சிப் பணிகள் என்றபெயரில் தங்களின் வாழ்வாதாரத்தையும், அமைதியையும் குலைக்கும் நிர்வாக அதிகாரி பிரபுல் ஹோடா படேலை திரும்பபெற வலியுறுத்தி லட்சத்தீவு மக்கள் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் சுற்றுலாத்தலமான லட்சத்தீவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த பிரபுல் ஹோடா படேல்புதிய அதிகாரியாக நியமிக்கப் பட்டார். அப்போது முதலே அங்குள்ள மக்களின் நிம்மதி தொலைந்து விட்டது.கடற்கரையில் மீனவர்கள் குடில்கள் அமைக்கத் தடை, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றால், அவர்கள் தேர்தலில் நிற்கத் தடை, மாட்டிறைச் சிக்குத் தடை, குண்டர் சட்டம் என்று கொண்டு வந்ததுடன், மறுபுறத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி, வெளிநாட்டு நிறுவனங்கள் ரிசார்ட் தொழில் நடத்த அனுமதி என்று பிரபுல் ஹோடா படேல்தொடர்ந்து பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார்.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசியல்கட்சித் தலைவர்கள், முன்னாள்ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள், திரைத் துறையினர் உட்பட பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பிரபுல் படேலின் நடவடிக் கைக்கு எதிராக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு சட்டப்பேரவையிலேயே தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், புதிய விதிமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். எனினும், பிரபுல் படேலால் வெளியிடப்பட்ட லட்சத்தீவுமேம்பாட்டு ஆணைய விதிமுறைகளை (The Lakshadweep Development Authority Regulation - 2021 LDAR) முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், பிரபுல் படேலைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, லட்சத்தீவு மக்கள் 12 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வீடுகளில் இருந்தவாறே இந்த 12 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.