உத்தரப்பிரதேசத்தில் கேஎப்சி உணவகத்தை மூடி இந்து ரக்ஷா தல் அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் இந்திராபுரத்தில் உள்ள கேஎப்சி உணவகம் ஒன்றில் அத்துமீறி உள்ளே நுழைந்த இந்து ர்சஷா தல் அமைப்பினர், இந்துக்களுக்குப் புனிதமான சாவன் மாதத்தில் அசைவம் விற்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்களுடன் KFC உணவகத்தை முற்றுகையிட்டு ஷட்டரை இழுத்து மூடி ரகலையில் ஈடுபட்டனர். மேலும் ஒரு அசைவ உணவத்திலும் ரகளையில் ஈடுபட்டு அதையும் மூடியுள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் செய்தியாளர்கள் கேட்டதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் வாய்மொழியாக அனுமதிபெற்றுதான் இப்படி செய்ததாகக் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.